தமிழ்நாடு இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது என்றால் காரணம் முதலமைச்சர் தான்..!-தமிழக அரசு - Seithipunal
Seithipunal


தமிழக அரசு 'முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது' என்று அவரை பாராட்டி ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டதாவது,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்.

அதற்காக தமிழ்நாடு மாநிலக் கொள்கையைப் புதிதாக வடிவமைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு புதிய வரலாறு படைக்க இருக்கும் தமிழ்நாடு அரசின் புதிய இந்த மாநிலக் கல்விக் கொள்கை 2025 தமிழ்நாடு முதலமைச்சரால் 8.8.2025 அன்று வெளியிடப்பட்டு கல்வியாளர்களால் வரவேற்கப்படுகிறது.

இல்லம் தேடிக் கல்வி கொரோனா காலக்கற்றல் இடைவெளியை நிறைவு செய்திடும் நோக்கில் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் அறிமுகப்படுத்திய திட்டம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.2025–- 2026-ம் கல்வியாண்டில் 34 ஆயிரம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் 5.986 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் 37,767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 25.08 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.28,067 அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100 Mbps வேகமான இணைய வசதி வழங்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள 6,540 அரசுப் பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தகைசால் பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரிப் பள்ளிகள் ரூ.352.42 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 

தொழிற்கல்வி கற்பிக்கும் 726 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்புத் திட்டமாக 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.அரசு ஆசிரியர்களுக்குப் பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இணைய வழி மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

11-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.தனித்தேர்வர்களுக்கான தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்றிதழ்கள் இணையவழியில் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் என மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்ய ஆணை வெளியடப்பட்டன.

கணினி வழியாக போட் டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,043 முதுகலை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. 97 வட்டாரக் கல்வி அலுவலர் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியி டங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள குறைதீர்க்கும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 -ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், திறன்மிகு வகுப்ப றைகள், காலை உணவுத் திட்டம், புதிய ஆசிரியர் நியமனங்கள், கல்விச் சுற்றுலா திட்டம் முதலிய பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதால் சிறந்த தரமான பள்ளிக் கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If Tamil Nad doing well India because Chief Minister Tamil Nadu Government


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->