உங்களுக்கு பல்சொத்தை இருக்கிறதா...அச்சோ அப்போ நீங்க இதை தெரிஞ்சிக்கணுமே...!
Do you have dental implant well then you should know this
பல் சொத்தை ஏற்படக் காரணங்கள் :
பல் பாதிப்புகளில் முதன்மையானது பல் சொத்தை. இது குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என எல்லோரையும் பாதிக்கின்றது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதுதான். குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றது. இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.

சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால், பாக்டீரியாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கும். அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போது, பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு, பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு, வாயில் நாற்றத்தை ஏற்படுத்தும்
குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியே உறங்கிவிடுவார்கள். அப்போது பற்களின் மேல் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும்.
பல் சொத்தையை வராமல் தடுக்கும் முறைகள் :
பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை பற்களை துலக்க வேண்டும்.
பல் தேய்த்தபின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
இரவில் படுக்கச் செல்லும் முன்பு உப்புத் தண்ணீரால் வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது.
நார்ச்சத்து, கால்சியம் போன்றவை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
சாப்பிட்டபின் வாயை நல்ல தண்ணீரில் நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
English Summary
Do you have dental implant well then you should know this