டெட்டானஸ் வந்தபின் காக்கும் முறைகள் என்னென்ன தெரியுமா..?
Do you know what methods are available to protect against tetanus
டெட்டானஸ் நோய் வராமல் தடுக்கும் முறைகள் :
செயல்திறன்மிக்க தடுப்பாற்றல் முறையின் மூலம் முழுமையாக தடுத்து நிறுத்தக்கூடிய ஒன்றுதான் டெட்டானஸ்.
டெட்டானஸ் டாக்ஸாய்ட் தனியாகவோ அல்லது பெரும்பாலான நேரங்களில் மூன்று கூறுகளையுடைய தடுப்புசியில், ஒரு கூறாகவோ கிடைக்கிறது.
இது குழந்தைகளுக்கு முதன்மை தடுப்பூசியாக டிப்தீரியா டாக்ஸாய்ட் மற்றும் பெர்டுஸிஸ் வாக்சினுடன் (டீபிடி) கலந்தும் மற்றும் வளர்ந்த குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு டிப்தீரியா டாக்ஸாய்டாகவும் கிடைக்கும்.

முதன்மை தடுப்பாற்றலுக்காக, பெரியவர்களுக்கு, டெட்டானஸ் ஊசியினை இரண்டு முறை, 4 அல்லது 6 வார இடைவெளிகளில் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது ஊசி, இரண்டாம் ஊசிக்குப்பிறகு 6 முதல் 12 மாதங்கள் கழித்து கொடுக்கப்படவேண்டும்.
10 வருடங்களுக்கு ஒருமுறை, நோய் எதிர்ப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளும் வண்ணம், கூடுதல் மருந்தானது கொடுக்கப்படவேண்டும்.நோயை உருவாக்கும் கிருமிகள் :
ஸ்போர் :
ஸ்போர்கள் மண், தூசி மற்றும் விலங்கினக்கழிவுகளில் இருக்கும். இவை பல வருட காலங்கள் உயிருடன் இருக்கும். இந்த ஸ்போர்கள் அதிகமான மற்றும் குறைந்த என எல்லா தட்ப வெப்பநிலைகளிலும் உயிர் வாழக்கூடியவை.
பொதுவாக, காயங்கள் டெட்டானஸ் ஸ்போர்களினால் மாசடையும். இருந்தபோதும் டெட்டானஸ் ஸ்போர்கள் முளைத்து செயல்பாடுடைய பாக்டீரியாவாக மாறும் போது டெட்டானஸ் - ஐ தோற்றுவிக்கும்.
செயல்வினை வடிவான பாக்டீரியா :
செயல்வினை வடிவான பாக்டீரியா, டெட்டானோலைஸின் மற்றும் டெட்டானோஸ்பாஸ்மின் எனும் இரண்டு வகை புறநஞ்சினை வெளிவிடுகிறது. டெட்டானோஸ்பாஸ்மின் நோய் தோன்ற இவை முக்கிய காரணமாகும்.
டெட்டானஸ் வந்தபின் காக்கும் முறைகள் :
டெட்டானஸ் நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டும். வெளிச்சம் அதிகம் இல்லாத, அமைதியான தனி அறையில் இவர்களுக்குச் சிகிச்சை தரப்படும்.
முதலில் தசை இறுக்கத்தைக் குறைக்கவும், உறக்கத்துக்கும் சிகிச்சை தரப்படும்.
English Summary
Do you know what methods are available to protect against tetanus