ஹவுதி பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!
Israel launches airstrikes in Yemen in response to Houthi attacks
ஏமனின் உள்ள ஏவுகணை தளங்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதிகலில், ஹவுதி அமைப்பினரை குறிவைத்து, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாத தொடக்கம் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது.

ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் காசாவுக்கு ஆதரவாக, இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமனில் அவ்வப்போது ஹவுதி அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஏமனின் ஏவுகணை தளங்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் ஹவுதி அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலின் போது பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் உறுதிப்படுத்திய நிலையில், மத்திய சனாவில் உள்ள ஒரு நகராட்சி கட்டடத்தை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் ஹவுதி பாதுகாப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசுக்கும், இஸ்ரேல் மக்களுக்கும் எதிராக ஹவுதி பயங்கரவாத அமைப்பு மீண்டும், மீண்டும் தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Israel launches airstrikes in Yemen in response to Houthi attacks