அதிமுகவை பிடிப்பேன்..அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன்..அடுத்த பிளானை சொன்ன அமித் ஷா? - Seithipunal
Seithipunal


சென்னை: அதிமுக உள்கட்சிக் கலகத்தை தீவிரமாக்கும் வகையில், முன்னாள் அமைச்சரும் கட்சியின் முக்கிய முகமாகக் கருதப்பட்ட கே.பி. மு. செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் வெளியிட்ட வீடியோவில், இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து அதிரடி தகவல்கள் வெளிச்சம் பார்த்துள்ளன.

அதன்படி, செங்கோட்டையன் அமித் ஷாவிடம், “என்னால் அதிமுகவை சிறப்பாக வழிநடத்த முடியும். நான் எடப்பாடியை விட சிறந்தவன். கட்சியில் அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் உள்ளன. அதிமுகவை நான் ஒருங்கிணைக்க முடியும். அவசியமெனில் உடைக்கவும் முடியும்” என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலளித்த அமித் ஷா, “உங்களால் ஒருநாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது. ஒரு நிமிடம் கூட கட்சியை நடத்த முடியாது. உங்களையும், உங்களின் பின்னால் உள்ளவர்களையும் (ஓ.பி.எஸ். உள்ளிட்டோர்) பற்றி எனக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியின் பலமும் எனக்கு தெரியும்” என கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பை பிஎல் சந்தோஷ் மற்றும் அண்ணாமலை ஏற்பாடு செய்ததாகவும், இதன் மூலம் “ஒன்றிணைவோம் வா” என்ற கோஷத்தைக் கொண்டு அதிமுகவின் உள்கட்டமைப்பை பாஜக சீரமைக்க முயல்கிறது என்றும் தாமோதரன் பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி, அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்திருந்தார். இப்போது அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு அதிமுக-பாஜக கூட்டணியில் புதிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், எடப்பாடி உடனடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதோடு, செங்கோட்டையன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாகவே, செங்கோட்டையன், “2016க்குப் பின் அதிமுக தொடர்ந்து தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது. பாஜக உடன் கூட்டணியில் இருந்திருந்தால், 2024 தேர்தலில் 30 இடங்கள் வென்றிருப்போம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், அதிமுகவின் உள்கட்சிப் பிளவு மீண்டும் வெளிப்படையாகி, எடப்பாடி – செங்கோட்டையன் இடையேயான மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will take on AIADMK Sengottaiyan met Amit Shah Amit Shah told him the next plan


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->