'குடிகார புருஷனோட டார்சர் தாங்க முடியலைங்க'....! கத்தியை எடுத்து குத்திக்கொன்ற 26 வயது இளம்பெண்...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள உப்புத்தூர் கிராமம் சங்கராபுரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மணி, கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி 26 வயதுடைய திவ்யபாரதி. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

குடும்பத்தில் நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும், குறிப்பாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் மணி அடிக்கடி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த மணி, திவ்யபாரதியுடன் கடுமையான தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை தாக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திவ்யபாரதி, கணவரை கீழே தள்ளிவிட்டு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மணி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற காவலர்கள், உயிரிழந்த மணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து திவ்யபாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பவம் தொடர்பான பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், திவ்யபாரதியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I couldnt bear torture drunken husband 26 year old woman stabbed herself knife


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->