எனக்கும் சுயமரியாதை உண்டு!பாஜக செய்தது மிக பெரிய தவறு! ஸ்டாலினை சந்தித்தது ஏன்? ஓபிஎஸ் சொன்ன பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓபிஎஸ்ஸை வாசலிலேயே வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

இந்தச் சந்திப்பு அரசியல் ஆர்வலர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதற்கிடையே, பாஜகவுடனான உறவை முறித்தபின்னர் ஓபிஎஸ் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தப்போகிறாரா? திமுகவில் இணையவா? என்ற கேள்விகளும் எழுந்தன.

இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “முதல்வர் ஸ்டாலினை மருத்துவமனையில் இருந்து திரும்பிய நிலையில் நலம் விசாரிக்கவே சந்தித்தேன். அரசியல் தொடர்பான எந்த விஷயமும் பேசவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே” என்று விளக்கம் அளித்தார்.

பாஜகவுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து அவர் தெரிவித்தபோது, “பாஜக என்னை அவமதித்தது என்று சொல்ல முடியாது. ஆனால் எனக்கு சுயமரியாதை இருக்கிறது. பாஜக தமிழகத்துக்கான கல்வி நிதியை நிலுவையில் வைத்திருப்பது ஜனநாயக முறைக்கு விரோதமானது. எனவே நான் கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தேன்” என்றார்.

மேலும், “நான் கூட்டணியில் இருந்து விலகியதற்குப் பிறகு பாஜகவில் இருந்து யாரும் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தார் என்பதை அனைவரும் அறிவார்கள். இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறார்கள். அவருக்குப் பூரண வாழ்த்துகள்” என்றார்.

இந்த சந்திப்புகள் அனைத்தும் ஓபிஎஸ் தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்தை திட்டமிட்டுக் கொண்டிருப்பதைத் காட்டுவதாகக் கருதப்படுகிறது. திமுகவோ அல்லது விஜய் தலைமையிலான தவெகவோ அவரது அடுத்த கூட்டணிப் பக்கம் ஆகுமா என்பதைக் காலமே நிர்ணயிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I also have self respect BJP made a big mistake Why did you meet Stalin Sensational information told by OPS


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->