உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மனைவி.. மன உளைச்சலில் கணவர் எடுத்த விபரீத முடிவு.!
Husband suicide for wife health issue
மன உளைச்சலில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான மூர்த்தி (வயது 55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி (வயது 50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வி மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மூர்த்தி அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband suicide for wife health issue