ஐயோ! மனைவி இறந்த சோகத்தில் கணவர்! கடிதம் எழுதி வைத்துவிட்டு எடுத்த விபரீதம் முடிவு!
husband in grief over death of his wife He wrote letter and made disastrous decision!
ஈரோடு கொல்லம் புதுப்பாளையத்தைச் சேர்ந்த 65 வயது கிராம உதவியாளராக விஜயகுமார் பணிபுரிந்தவர். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்று விட்டார். இவரது மனைவி சரோஜா நேற்று முன்தினம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சரோஜா பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதன் காரணமாக வேதனையடைந்த விஜயகுமார் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இறந்த சரோஜாவின் உடலை நல்லடக்கம் செய்யும் ஏற்பாட்டில் உறவினர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிலிருந்த விஜயகுமார் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது அவர் வீட்டின் அருகே சற்று தொலைவில் மயானத்தில் விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மயானத்தில் தேடிய போது அங்கு ஒரு பகுதியில் ஒருவரது உடல் தீயில் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக கொடுமுடி காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது.
கடிதம்:
அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை விஜயகுமார் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில்," தனது மனைவியின் இறப்பை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் இந்த விபரீத முடிவை எடுக்கப் போகிறேன். இதற்கு யாரும் பொறுப்பில்லை" என்று எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து மயானத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விஜயகுமார் என தெரிய வந்தது. மேலும்,மனைவியின் பிரிவை தாங்க முடியாத துக்கத்தில் விஜயகுமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இது குறித்து கொடுமுடி காவலர்கள் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.மனைவி இறந்த துக்கத்தில், உடல் நல்லடக்கம் செய்வதற்குள் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
husband in grief over death of his wife He wrote letter and made disastrous decision!