இறப்பிலும் இணைபிரியாத விசைத்தறி கூலி தொழிலாளி தம்பதி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் செந்தில் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 76). இவரது மனைவி கருப்பாத்தாள் (வயது 68). இதில் பழனிசாமி கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இரு மாவட்ட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த பழனிச்சாமி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதனால் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த மனைவி கருப்பாத்தாள் நேற்று காலை 10 மணி அளவில் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்த நாட்களில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் விசைத்தறியாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நேற்று மதியம் இருவரின் உறவுகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அய்யம்பாளையம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது இறப்பிலும் இணைபிரியாத தம்பதியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband and wife death in covai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->