மது அருந்திய கணவன் - மனைவி..தலைக்கு ஏறிய போதையால் நடந்த விபரீதம்! - Seithipunal
Seithipunal


பள்ளி வளாகத்தில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகலாத சர்தார் என்ற 42 வயது நபரும் அங்கி தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார்.

இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 36 வயதான பிங்கி என்ற பெண்ணை 2-வதாக பிரகலாத சர்தார் திருமணம் செய்து கொண்டு  கட்டுமான பணியில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கணவன் -மனைவி இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது  இருவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து  ஆந்திரமடைந்த பிரகலாத சர்தார் பிங்கியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிங்கி கணவரை தள்ளிவிட்டு அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு ஆகணவரின் கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பிரகலாத சர்தாரின் இடது பக்க கழுத்தில் ஆழமான கத்தி குத்தி காயம் ஏற்பட்டது.

இதில் கீழே சாய்ந்த பிரகலாத சர்தார் ரத்த வெள்ளத்தில் துடித்தபடியே கிடைந்து உள்ளார். பின்னர் உடனடியாக சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர்.ஆனால் அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரகலாத சர்தாருக்கு மாத்திரை மட்டும் கொடுத்து விட்டு தையல் எதுவும் போடாமல் அனுப்பி வைத்துள்ளனர். 

கத்திகுத்து காயம் ஏற்பட்ட இடத்தில் உரிய தையில் போடாததால் அதிலிருந்து ரத்தம் வெளியேறி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி தகவல் கிடைத்ததும் குமரன் நகர் போலீசார் விரைந்து சென்று பிரகலாத சர்தாரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மனைவி பிங்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband and wife after consuming alcohol. The tragedy that occurred due to extreme drunkenness


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->