சென்னையில் பதற்றம்! திமுக அரசை கண்டித்து இஸ்லாமிய கட்சி எடுத்த அதிரடி முடிவு!
Humanist Democratic Party protest against dmk govt in tn assembly
சென்னையில் பதற்றம்! திமுக அரசை கண்டித்து இஸ்லாமிய கட்சி எடுத்த அதிரடி முடிவு!
சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் அதிமுக சார்பில் இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரபட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது இரண்டாம் நாளான நேற்று விவாதம் நடைபெற்றது.
அப்போது, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அப்போது இஸ்லாமியர்களுக்கு அதிமுக, ஒரு துடுக்கு கூட கிள்ளிப்போடவில்லை என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க முற்பட்டதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காததால், அதிமுகவினர் கூட்டத்தொடரில் இருந்து எழுந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை சம்மந்தமாக தமிழக சட்டமன்றத்தில் தவறான தகவல் அளித்த திமுக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையில் இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
English Summary
Humanist Democratic Party protest against dmk govt in tn assembly