வீட்டு வாசலில் கிடந்த மண்டை ஓடு - திட்டமிட்ட சதியா? போலீசார் விசாரணை..!!
human skull and bones found front of house in chennai
சென்னையில் உள்ள வடபழனி சோமசுந்தர பாரதியார் நகர், நான்காவது தெருவை சேர்ந்தவர் கருணாகரன். இவர் கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கருணாகரன் நேற்று காலை வீட்டில் இருந்து எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் வாசலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்துள்ளது. இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் கத்திக் கூச்சலிட்டார்.
இந்தச் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும், சிறுவர்களும் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது கருணாகரன் வீட்டு வாசலில் பில்லி சூனியம் வைத்தது போல் கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளை கண்டு அவர்களும் பீதியில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மண்டை ஓடு எப்படி வந்தது? இது யாருடைய சதியா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
human skull and bones found front of house in chennai