அத்திவரதர் கோயிலில் காவல் ஆய்வாளரை திட்டிய கலெக்டருக்கு உண்டான சிக்கல்! - Seithipunal
Seithipunal


கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வருவது காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலின் அத்தி வரதர் தரிசனம் தான். அத்தி வரதரை வழிபாடு செய்ய வந்த பக்தர்களை, விவிஐபி பாஸ் இல்லாதவர்களையும், அந்த வழியாக தரிசனம் செய்வதற்கு அனுமதித்த, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் ஒருமையில் கடுமையாக, பொதுமக்களின் முன்னிலையில் திட்டினார். 

அந்த காணொளி ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக, இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.  மேலும் மாவட்ட ஆட்சியர் அந்த காவல்  ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்யவும் ஐஜிக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் பொதுமக்கள் முன்னிலையில் காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதற்காக, மாவட்ட ஆட்சியர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என மாநில மனித உரிமைகள் ஆணையம் கேள்வி கேட்டுள்ளது. 

மேலும் இது குறித்து இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தானாகவே மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Human Rights Commission notice to home secretary and DGP


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal