சிவகங்கையில் பயங்கரம்...! மது விருந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவர் கொடூரக் கொலை...! - காவலர்கள் தீவிர விசாரணை
Horror Sivaganga 10th grade student who taken liquor party brutally murdered Police investigating intensively
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜின் மகன் அஸ்வின் (15), திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்றதாக கூறப்படும் அஸ்வின், வகுப்பறையை அடையாமல் நண்பர்களுடன் வேறு இடத்துக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இளந்தமங்கலத்தைச் சேர்ந்த அரவிந்த், காரையூரைச் சேர்ந்த கணேசன் மற்றும் அஜய் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வெளியே உள்ள கண்மாய் பகுதிக்கு அஸ்வின் சென்றுள்ளார். அங்கு நால்வரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அஸ்வினுக்கும் அரவிந்துக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலையை சீர்செய்ய அஜய் முயன்றும் பலனளிக்காததால், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் திரும்பி வந்தபோது, அஸ்வின் கழுத்தில் ஆழமான காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகு அரவிந்த் மற்றும் கணேசன் இருவரும் அங்கிருந்து தலைமறைவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள இருவரையும் கண்டுபிடிக்க பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "மாணவருக்கு மதுபானம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள இருவரையும் விரைவில் கண்டுபிடிக்கும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பிடிபட்ட பின்னரே இந்த கொலையின் பின்னணி மற்றும் காரணம் முழுமையாக வெளிச்சத்துக்கு வரும்" என்று தெரிவித்தனர்.
English Summary
Horror Sivaganga 10th grade student who taken liquor party brutally murdered Police investigating intensively