செய்யாறில் பயங்கரம்: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...! - காம மிருகத்தை கூண்டில் அடைத்த காவலர்கள்...! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவிற்குட்பட்ட நாட்டேரி கிராமத்தில் சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்கிற ஷாம் (21), மாங்கால் கூட்ரோட்டில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து உடல்நல பாதிப்புக்குள்ளான அந்த சிறுமி, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் குற்றச்சாட்டுக்கு உள்ளான பூபதியை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horror Cheyyar harassment 3yearold girl Guards who locked pocsocase person cage


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->