ஹனிமூன் செல்லும் முன் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்!
Honeymoon trip before the newlywed rush with boyfriend
ஹனிமூன் செல்ல இருந்த நிலையில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் படாவன் மாவட்டத்தில்மவுசம்பூர் இஸ்லாம் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவருக்கும் பிசாவ்லி கொத்வாலி பகுதியை சேர்ந்த குஷ்பு என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே 17-ந்தேதி திருமணம் உறவினர்கள் புடைசூழ கோலாகலமாக நடந்து முடிந்தது.
புது மாப்பிளை அடுத்த நாள் மனைவியை சுனில் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று 9 நாட்கள் கணவருடன் குஷ்பு ஒன்றாக சந்தோசமாக இருந்துள்ளார். இதன்பின்னர், விருந்து மற்றும் சடங்கு நிகழவுக்காக மணமகளை அவருடைய வீட்டார் அழைத்து சென்று விட்டனர். அந்த சமயம் சுனில், ஹனிமூன் செல்வதற்காக தயாராகும் வேலையில் ஆசை ஆசையா இறங்கியுள்ளார்.இந்தநிலையில்தான் சுனில், ஹனிமூன் செல்ல இருந்ததில் இடி விழுந்துள்ளது.
னால், புதுப்பெண் குஷ்பு 10 நாட்கள் பெற்றோருடைய வீட்டில் இருந்தபோது திடீரென காணாமல் போய் காதலரை தேடி சென்று விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடிய நிலையில் மனைவி காணாமல் போன விவரம் சுனிலுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, போலீசார் ஒருபுறம் மணமகளை தேடி வந்தநிலையில், பிசாவ்லி காவல் நிலையத்திற்கு காதலரை தேடி, கணவரை தவிக்க விட்டு விட்டு சென்ற குஷ்பு சென்றுள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் ஒன்று கூடிய இரு வீட்டாரும் சமரசம் செய்து தங்கம், வெள்ளி உள்ளிட்ட அவரவர் பொருட்களை திருப்பி கொடுத்து விட்டனர்.குஷ்பு, காதலருடனேயே வாழ விரும்புகிறேன் என உறுதியாக தெரிவித்ததையடுத்து சுனிலும் அவரை மகிழ்ச்சியாக அனுப்பி வைத்து விட்டார்.
English Summary
Honeymoon trip before the newlywed rush with boyfriend