ஆந்திராவில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்.! உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டம் எஸ்.பி.சுங்கச்சாவடியில் கடந்த 21 ம் தேதி வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலித்ததை தட்டிக்கேட்ட தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் வக்கீல் பிரிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சங்கர் தலைமை தாங்கிய நிலையில், மாநில தலைவர் சேவியல் பெலிக்ஸ் முன்னிலை வகித்தார். மேலும், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் தடா சந்திரசேகர் மற்றும் வக்கீல் ராவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

ஆந்திராவில் தமிழக மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், காயம் அடைந்த தமிழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொடிகளையம் பேனர்களையும் ஏந்தியபடி கோஷமிட்டனர்.

இதற்கு முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் சத்தியசீலன் தலைமையில் உயர்நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

highcourt lawyers strike for law college students attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->