ஜோலார்பேட்டை–கோவை ரெயில் பாதையில் இன்று அதிவேக பாய்ச்சி...! 130 கி.மீ. சோதனை ஓட்டம் தொடக்கம்!
High speed train on Jolarpettai Coimbatore railway line today 130 km Test run begins
தமிழகத்தின் முக்கிய ரெயில் பாதைகளில் அதிவேக ரெயில் சேவையை விரிவாக்கும் நோக்கில் தென்னக ரெயில்வே தீவிர மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 100 கி.மீ.க்கு குறைவான வேகத்தில் ஓடிய தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு 110 கி.மீ. வேகத்திற்கு உயர்த்தப்படுகின்றன.
அதேபோல், ஏற்கனவே 110 கி.மீ. வேகத்தில் ஓடிவரும் பாதைகள் 130 கி.மீ.க்கும் மேற்பட்ட அதிவேக ரெயில்களுக்கு தகுந்தவாறு புதுப்பிக்கப்படுகின்றன.இதற்கு முன்னர், சென்னை–சேலம்–கோவை பாதையை அதிவேக பாதையாக மாற்றும் திட்டம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை–ஜோலார்பேட்டை இடையேயான தண்டவாள மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றதால், அந்தப் பகுதியில் தற்போது 130 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் பாய்ந்து செல்கின்றன.இந்நிலையில், ஜோலார்பேட்டை–கோவை பாதையிலும் 130 கி.மீ. வேக ரெயில் பயணத்துக்கான சீரமைப்பு பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.
அதன் முதல் கட்ட சோதனை ஓட்டம் இந்த மாதம் 15ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது, இரண்டாவது கட்ட அதிவேக சோதனை ஓட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
சோதனை நடைமுறையினை முன்னிட்டு, இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை–ஜோலார்பேட்டை ரெயில் வழித்தடத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரெயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.
English Summary
High speed train on Jolarpettai Coimbatore railway line today 130 km Test run begins