சட்டவிரோதமாக ஒட்டகங்கள் பலியிடுவதைத் தடுக்கவேண்டும்..தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


சட்டவிரோதமாக ஓட்டகங்களை பலியிடுவதை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில்  கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்துக்கு சட்டவிரோதமாக ஒட்டகங்களை கொண்டு வருவதையும், பலியிடுவதையும் தடுக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,

ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஒட்டகங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து பலியிடுவதாக தெரிவித்தனர். அரசு வழக்கறிஞர் தெரிவிக்கையில், சட்டவிரோதமாக ஒட்டகங்கள் கொண்டு வருவதையும், பலியிடுவதையும்  தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஐந்தாண்டுகளாக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை என தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அரசு தரப்பு வாதத்தை ஏற்றுகொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக ஒட்டகங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து பலியிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Court orders ban on illegal slaughter of camels in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->