வங்கதேசத்தில் கொடூரம்; ஹிந்து தொழிலாளியை அடித்தே கொன்று, உடலை நடுரோட்டில் எரித்த இஸ்லாமிய கும்பலின் வெறிச்செயல்..!
A mob beat a Hindu worker to death in Bangladesh
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில், சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த போதும் தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டு வருகின்றன. குறிப்பாக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கல் நீடித்து வருகிறது.
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்க்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்த சூழலில், அங்கு சிறுபான்மையினரான ஹிந்து மதத்தை சேர்ந்தவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்று, அவரது உடலை நெடுஞ்சாலையில் போட்டு எரித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைமென் சிங் மாவட்டத்தில் பலுகா உபாஜிலா என்ற இடத்தில் திபு சந்திர தாஸ் (30) என்ற ஹிந்து மதத்தை சேர்ந்தவரையே வன்முறையாளர்கள் அடித்து கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர், இஸ்லாம் மதம் குறித்து அவதூறாக பேசியதாக அந்த கும்பல், அவரை மிரட்டியதோடு, கடுமையாக தாக்கியுள்ளனர். அதாவது அவரது உயிர் போகும் வரை தாக்கிய அந்த கும்பல், அவரது உடலை அருகில் இருந்த பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். பின்னர், தேசிய நெடுஞ்சாலையில் உடலை போட்டு தீவைத்து எரித்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்த கொடூர சம்பவத்திற்கு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் முகமது அலி அராபத் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் பிரிவினைவாதத்தை நோக்கி செல்வதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், வங்கதேச இடைக்கால அரசும், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுக்கு நாட்டில் இடமில்லை என்றும், இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது. இந்த முக்கியமான நேரத்தில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
English Summary
A mob beat a Hindu worker to death in Bangladesh