மாண்டஸ் புயலால் சென்னையில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை...!! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் அடைவடைந்து நேற்று அதிகாலை மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலானது மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்பொழுது மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த புயலானது வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் இன்று இரவு சென்னையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயலின் காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புயலின் காரணமாக சென்னை முழுவதும் குளிரான சூழல் நிறைவு வருகிறது. 

மாண்டஸ் புயலின் காரணமாக கிண்டி, மாமல்லபுரம், சைதாப்பேட்டை, எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை சென்ட்ரல், எழும்பூர், குன்றத்தூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மயிலாப்பூர் வேளச்சேரி, திருப்போரூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rains in Chennai due to Mandous storm


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->