நாளை 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'! சென்னை - புதுச்சேரி இடையே இன்று இரவு கரையைக் கடக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
Heavy Rain Chennai Rain tamilnadu
சென்னை அருகே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் 12 மணி நேரம் நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சின்னம் தற்போது தமிழ்நாட்டுக் கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது.
கரையைக் கடக்கும் நேரம்
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்றைய (டிச. 2) மழை எச்சரிக்கை
தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக இன்று மிகக் கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு.
இதைத் தவிர, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளைய (டிச. 3) மழை எச்சரிக்கை
'ஆரஞ்சு அலர்ட்' (மிகக் கனமழை): கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள். கனமழை: சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்.
English Summary
Heavy Rain Chennai Rain tamilnadu