வெப்ப அலை அதிகரிப்பு ..வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம்..பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி பேரிடர் மேலாண்மை  துறை சார்பாக புதுச்சேரி மக்களுக்கு வெப்ப அலை தாக்கம் அதிகரிப்பு குறித்து தற்காப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை   மற்றும் விழிப்புணர்வு  செய்தியினை  புதுச்சேரி சுகாதாரத்துறை  அறிவித்துள்ளது.

இதுகுறித்து நலவழித்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் அடுத்து வரும் நாட்களில் சராசரி வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவித்துள்ள நிலையில் 
குறிப்பாக  உடலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்  இருந்து அதனுடன் குமட்டல் மற்றும் வாந்தி, கடுமையான தலைவலி, சோர்வு மற்றும் கால் பிடிப்பு, மூச்சு திணறல் நெஞ்சு படபடப்பு, தலை சுற்றல், மயக்கம்  போன்ற வெப்பம் சார்ந்த நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்  அழைத்து உடனடியாக மருத்துவ  சேவையினை பெற வேண்டும்.  

அதுமட்டுமன்றிபொதுமக்கள் நண்பகல் 12:00 மணி முதல் மூன்று மணி வரை அத்தியாவசியமான தேவை இன்றி வீட்டில் இருந்து வெளியே  வர வேண்டாம் என்றும், மதிய வேளையில் வெளியில் நிறுத்தப்படுகிற வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்  என்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட புதுவை மாநில அரசு துறை பேரிடர் மேலாண்மை துறை சுகாதாரத்துறை அந்தந்த பகுதிகளில்  உள்ள சமுதாய நல்வழி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களின் மூலமாக பல்வேறு மக்கள் சார்பு துறையில் மூலமாகவும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வெப்பநிலையால் மனித உயிரிழப்பு உடல் பாதிப்பு தாக்கத்தை தவிர்க்கும் பொருட்டு விழிப்புணர்வு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் மேலும் வெப்பத்தினால் ஏற்படும் அறிகுறிகளை  கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என  நலவழித்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heat wave surge Dont come out of the house Health alert to the public


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->