நெஞ்சை உலுக்கிய ரயில் பயணம்! ஓடும் ரயிலில் மயங்கி விழுந்து பெண் உயிரிழந்த சோகம்...! - என்ன நடந்தது...? - Seithipunal
Seithipunal


மதுரையில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்த முதிய பெண் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்து பின்னர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரெயில், நேற்று முன்தினம் இரவு சுமார் 9.45 மணியளவில் நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அப்போது ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கவனித்த பயணிகள் உடனடியாக தகவல் அளித்ததையடுத்து, ரெயில்வே காவலர்கள் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.இதுகுறித்து ரெயில்வே காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் சிவகங்கை மாவட்டம் கீழ்த்தாரை நடுத்தெருவைச் சேர்ந்த தவமுத்து (65) என்பது தெரியவந்தது.

அவர் மணிராஜின் மனைவி என்றும், அவருடைய மகன் கார்த்திக் மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருவதும் விசாரணையில் உறுதியானது.இந்த சம்பவம் குறித்து ரெயில்வே காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heartbreaking train journey Tragedy woman faints moving train and dies What happened


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->