நீலகிரியில் நெஞ்சை பதற வைத்த சம்பவம்! பாறைகளுக்கு நடுவே சிக்கிய கரடியை வனத்துறையினர் மீட்டனரா...? இல்லையா...? - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரிக்கையூர் பழங்குடியினர் கிராமத்தில், நேற்று மாலை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. சுமார் 300 அடி உயரமான செங்குத்தான மலைப்பகுதிக்கு தேனைப் பருக ஏறிய கரடி, தவறுதலாக இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் சிக்கி அசைய முடியாமல் தவித்தது.

இதை ரோந்து பணியில் இருந்த சோலூர் மட்டம் வனத்துறையினர் கவனித்து உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் 10 பேர் கொண்ட வனத்துறைக் குழு விரைந்து வந்து கரடியை மீட்க முயன்றது.

நேரடி மீட்பு கடினமாக இருந்ததால், கரடியை மயக்கி பாதுகாப்பாக மீட்க தீர்மானிக்கப்பட்டது.கால்நடை மருத்துவர் மயக்க ஊசி செலுத்திய பின்னர் கரடி மயக்கநிலைக்கு சென்றது.

தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் கயிறு கட்டி செங்குத்தான மேட்டுக்குள் இறங்கி, சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின், கரடியை உயிருடன் பாதுகாப்பாக மீட்டனர்.

பின்னர் கரடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டது. மயக்கம் தெளிந்த கரடி பின்னர் காட்டுக்குள் ஓடிச் சென்றது. இந்த அபூர்வ மீட்பு நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

heart wrenching incident Nilgiris Did forest department rescue bear trapped among rocks or not


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->