தமிழக அரசை பாராட்டிய மத்திய அமைச்சர்.. முன்கள பணியாளர்களுக்கு நன்றி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தடுப்புசி ஒத்திகையை பார்வையிட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன்  இன்று தமிழகம் வந்துள்ளார். சென்னையில் நடைபெற்றுவரும் தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.

கொரோனா தடுப்புசி ஒத்திகையை ஆய்வு செய்த பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியாதவது, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என கூறினார்.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் சந்திக்க உள்ளார். அப்போது தமிழகத்துக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை, தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்திற்கு கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harsh vardhan press meet in chennai


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal