வரும் 31ஆம் தேதி வரை பணிக்கு வர வேண்டாம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில், முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் வரும் 31ம் தேதி வரை அலுவலகத்திற்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நோய்த் தொற்றைத் தவிர்க்க அத்தியவசிய பணிகளுக்கென மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் பணியாற்ற வேண்டாமென என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுதிறனாளி அரசு பணியாளர்களின் உடல் குறைபாடும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஜூலை 31ம் தேதி வரை அரசு அலுவலகங்கள் வந்து பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால், தனியார் மற்றும் அரசு போக்குவரத்து தேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், மாற்றுத்திறனாளி பணியாளர்கள் அலுவலகம் வந்து பணிகளை மேற்கொள்வதில் இருந்து ஆகஸ்ட் 31-ம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது என தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

handicapped civil servants do not come to office


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->