கோவில் சிலையில் கைவரிசை...! அம்மன் நகையைத் திருடிய 2 பேர் அதிரடி கைது...! - சேலத்தில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருபவர் பூலாவரி வாணியர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி (65).இந்தச் சம்பவத்தன்று வழக்கம்போல் அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு வந்த அவர், அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது கோவில் வளாகத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக பூசாரி தண்ணீர் எடுக்கச் சென்ற நேரத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், நேராக கருவறைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பூசாரி உடனடியாக கருவறைக்குள் சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 2 பவுன் தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது.

மேலும், நகையை அபகரித்த நபர் கோவிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்துடன் காத்திருந்த மற்றொருவருடன் தப்பிச்சென்றதும் பின்னர் தெரியவந்தது.

இந்த துணிகர திருட்டுச் சம்பவம் குறித்து சுப்பிரமணி கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணையில், ஓமலூர் பூமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (42), ராமன் (42) ஆகியோர் இணைந்து அம்மன் நகையை திருடியிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து இருவரையும் கைது செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Handcuffs temple statue 2 people arrested stealing Amman jewelry Excitement Salem


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->