கொடூரம்! மருமகள் நடத்தையில் சந்தேகம்! கோவத்தில் பேத்தி வாயில் மண்ணை போட்டு கொன்ற பாட்டி! - Seithipunal
Seithipunal


அரியலூர் அருகே ஒரு வயது பேத்தியின் வாயில் மண்ணை திணித்துக் பாட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்ட கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி சந்தியா இவர்கள் இவருடைய மகன் மோனிஷ் மற்றும் கிருத்திகா . ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா எனது குழந்தையை வீட்டின் முன் விட்டுவிட்டு அருகே உள்ளே  பால்பண்ணைக்கு சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை சுயநினைவு இன்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக குழந்தையை பெண்ணாடம்  அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையை கிருத்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில் காவல்துறை விசாரணையை தொடங்கியது. சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையின் பாட்டி விருதம்மாளிடம்  விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கிருத்திகா தனது மகனுக்கு பிறக்கவில்லை என்று சந்தியாவிடம் அடிக்கடி விருத்தம்மாள் தகராறில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த விருகம்பாள் சம்பவதன்று குழந்தையின் வாயில் மண்ணை போட்டு திணித்து உள்ளார். இதில் குழந்தை மயங்கி விழுந்து இறந்து உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையின் வாயில் மண்ணை திணித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

அதனையடுத்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். மருமகள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பேத்தியின் வாயில் மண்ணை போட்டு திணித்து பாட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Grandmother kills granddaughter by stuffing dirt in her mouth near Ariyalur


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->