தாத்தா - பாட்டிக்கு கோயில்கட்டி வழிபாடு செய்யும் பாசப் பேரன்கள்.!
Grand childrens build temple grandfather and grandmother
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரம் ஊராட்சி அருகே அத்திமரத்து குட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யமுத்து - அய்யம்மாள் தம்பதியினர். இதில் அய்யமுத்து ராமாயி பட்டியில் உள்ள கோயிலில் பூசாரியாக பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறிவந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும், இவரது மனைவி அய்யம்மாள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் உயிரிழந்தனர். இதில் அய்யமுத்து உயிருடன் இருக்கும்போதே, இறந்த பிறகு தனக்கு சொந்தமான நிலத்தில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் தாத்தாவின் ஆசயை நிறைவேற்ற வேண்டும் என்று அவரது பேரன்கள் திட்டமிட்டனர். இதனையடுத்து அய்யமுத்து உயிருடன் இருக்கும்போதே எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாரோ அதே இடத்தில் அய்யமுத்து, அவரது மனைவி அய்யம்மாள் இருவருக்கும் கோயில் கட்டி சிலை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று முன்தினம் அரச மரத்தடியில் விநாயகர் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். மேலும் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குடும்பத்தினர் வழிபட்டனர். தாத்தா பாட்டிக்கு கோயில் கட்டி வழிபாடு செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Grand childrens build temple grandfather and grandmother