எனக்கு முதல்வருடன் நேரடி டீலிங்.. கெத்து காட்டிய அரசு பள்ளி ஆசிரியர்.. கொட்டு வைத்த பள்ளிக்கல்வித்துறை..!!
Govt school teacher suspended for threatened to use photo taken with CM
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் முதல்வர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து அரசு அதிகாரிகளை மிரட்டிய சம்பவத்தால் அதிர்ச்சி...!!
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்துக்கு உட்பட்ட கூடலூர் அருகே முதல்மைல் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அருண்குமார் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சக ஆசிரியர்களிடம் மிரட்டும் விதமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இவர் மீது பல்வேறு புகார்கள் குவிந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பெயரில் விசாரணை நடத்தியதில் அவர் பள்ளிக்கு சரிவர செல்லாமல் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மிரட்டும் விதமாக நடந்து கொண்டதும் விசாரணையில் உறுதியானது. இதனை அடுத்து இடைநிலை ஆசிரியர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
English Summary
Govt school teacher suspended for threatened to use photo taken with CM