அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல்நலம் பராமரிப்பதற்காக சோப்பு தேங்காய் எண்ணெயை வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022 - 2023 ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானிய கோரிக்கையின் போது கீழ்க்காணும் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, 22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல்நலம் பராமரிப்பதற்காக சோப்பு தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் 30 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தி ரூ.2.52 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல்நலம் பராமரிப்பதற்காக சோப்பு தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் 30 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt school hostel students more benefits in self cleaning


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->