திருநெல்வேலியில் பிணமாக மீட்கப்பட்ட ஆண் சிசு - அரசு செவிலியர் கைது.!!
govt nurse arrested for died boy baby case
திருநெல்வேலியில் பிணமாக மீட்கப்பட்ட ஆண் சிசு - அரசு செவிலியர் கைது.!!
கடந்த 23-ம் தேதி, பிறந்து சில மணிநேரங்களேயான ஆண் குழந்தை ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில், நாங்குநேரி அருகே உள்ள அணையப்பபுரம் சாலையில் சடலமாகக் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து மூலக்கரைப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன் படி அவர்கள் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் ஆண் சிசுவைக் கொன்றது மூலக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக இருக்கும் தனலெட்சுமி என்பது தெரியவந்தது. இவர், மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த இசக்கித்துரை என்பவரைக் காதலித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
இதனால் கர்ப்பமான தனலெட்சுமி இதனை ரகசியமாகவே வைத்துள்ளார். இந்த நிலையில் தனலெட்சுமிக்கு பிரசவ வலி வந்ததும் தன் காதலன் இசக்கிதுரையிடம் தகவல் தெரிவித்தார். அதன் படி அவரும், அவரது தாய் ராசாமணியும் தனலெட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழியிலேயே தனலெட்சுமிக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.
இதையடுத்து அவர்கள் குழந்தையை அங்கேயே தூக்கி வீசி விட்டுச் சென்றது. இதைத் தொடர்ந்து போலீசார் அரசு செவிலியர் தனலெட்சுமியைக் கைது செய்து தலைமறைவான இசக்கிதுரை மற்றும் அவரது தாயாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
govt nurse arrested for died boy baby case