மாணவர்கள் கவனத்திற்கு.. ஐ.டி.ஐ படிப்பில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
Govt ITI application Last day of today
தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சி பெறுவதற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 12 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் தற்பொழுது 2023-2024 ஆம் கல்வியாண்டில் பயிற்சி பெற சேர்க்கை பதிவு துவங்க உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.05.2023 முதல் 07.06.2023 தேதியுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஜூன் 20ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த மையங்களின் பட்டியல் மேலே கொடுக்கப்பட்ட இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் onlineitiadministration@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 94990 55612 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Govt ITI application Last day of today