ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை சேலம் வருகை: எதற்காக தெரியுமா?
Governor RN Ravi visit Salem tomorrow
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமான மூலம் நாளை கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அவரை மாவட்ட ஆட்சியர் வரவேற்கிறார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில், டெல்லியில் நடைபெற்ற டி20 மாநாடு தொடர்பாக நாளை மாலை 4.30 மணி அளவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

இதனை தொடர்ந்து நாளை இரவு ஆளுநர் பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குகிறார். நாளை மறுநாள் பெரியார் பல்கலைக்கழகத்தின் 22 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி செல்லும் பாதை மற்றும் பெரியார் பல்கலைக்கழகப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
Governor RN Ravi visit Salem tomorrow