திடீரென ஊட்டிக்கு புறப்படவுள்ள ஆளுநர்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நீலகிரி, ஊட்டியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற துணைவேந்தர் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். 

இந்த மாநாட்டில் புதிய தேசிய கல்வி கொள்கை பற்றியும், இந்திய மொழிகளில் பாடங்களை கற்றுக் கொடுக்கும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

மேலும் முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக ஆளுநர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக ஆளுநர் இன்று ஊட்டி செல்ல உள்ளார். 

சென்னையில் இருந்து மதியம் 2:30 மணிக்கு விமானம் மூலம் கோவைக்கு செல்ல உள்ளார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கு மாலை 6:15 மணிக்கு செல்ல உள்ளார்.

இதனை அடுத்து நாளை ஊட்டி அருகே உள்ள முத்தநாடு மந்து பகுதியில் வாழ்ந்து வரும் தோடர் இன மக்களை ஆளுநர் சந்தித்து அவர்களுடன் உரையாட உள்ளார். நாளை மறுநாள் அங்கு நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று 18ஆம் தேதி காலை கோவை புறப்பட உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor RN Ravi leaving Ooty today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->