தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்..அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் பொதுமக்களிடமிருந்து 504 பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது  குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும்  504  மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 120 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 111 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 62 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 136  மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 76 மனுக்களும் என மொத்தம் 504 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ,இராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) பாலமுருகன்,  உதவி ஆணையர் கலால் கணேசன்,  வருவாய் கோட்ட ஆட்சியர் திருத்தணி கனிமொழி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர்கள் உஷா ராணி , மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government welfare assistance for eligible beneficiaries District Collectors directive to the officials


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->