சிறுவனுக்கு வயிறு வழியாக வந்த மலம்.! அறுவை சிகிச்சை செய்த சாதித்த அரசு மருத்துவர்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 12 வயது சிறுவன் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சேர்ந்துள்ளார். அந்த சிறுவனை டாக்டர்.பிரகாஷ் ராஜேந்திரன் என்ற மருத்துவர் பரிசோதித்தார். பரிசோதனையில் அந்த சிறுவனுக்கு வயிறு வீங்கி இருந்தது மட்டுமில்லாமல், இதய துடிப்பும் மிக அதிகமாக இருந்தது கன்டுபிடிக்கப்பட்டது, மேலும் நீர் சத்து குறைந்து ஷாக் என்ற நிலையில் சிறுவன் இருந்துள்ளான். 

உடனே அவனுக்கு நெரம்பு வழியாக க்ளுகோஸும் ஆன்டி பையோட்டிக் மருந்தும் செலுத்தி ரத்த அழுத்தத்தை சரி செய்ய டாக்டர்.பிரகாஷ் ராஜேந்திரன் முயற்சி மேற்கொண்டார். ஆனால் சிறுவனுக்கு மேலும் வயிறு வீங்கி போனது

இதையயடுத்து, ஸ்கேன் எடுத்ததில் சிறுவனுக்கு குடல் அடைப்பு இருப்பதாகவும் ஆனால் காரணம் தெரிய வில்லை என்று ஸ்கேன் ரிப்போர்ட் வந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சைக்கு செய்ய முடிவெடுத்த மருத்துவர் பிரகாஷ், அதன்படி சிறுவனின் வயிற்றை கிழித்தவுடன் சுமார் 1 லிட்டர் அழுகிய ரத்தம் வெளியே வந்ததுள்ளது. பின்னர் குடல் அழுகி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர் சிறுவனின் சிறு குடல் கிட்டத்தட்ட 100 சென்டி மீட்டர் அழுகி இருந்தது. 

இதையடுத்து அந்த அழுகிய குடலை வெட்டி எடுத்து விட்டு ,சிறு குடலையும் பெரு குடலையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்தனர்.

குடல் அழுக காரணம், வாழ்வுலஸ் என்று கண்டுபிடித்த மருத்துவர்கள், அப்படியென்றால் ரத்த ஓட்டம் தடை பட்டு குடல் அழுகி போவது என்று அர்த்தம்.

சிறுவனுக்கு செய்த அறுவை சிகிச்சையால் அறுவை அரங்கம் முழுவதும் மூன்று நாட்களுக்கு துர்நாற்றம் வீசியுள்ளது. குடல் அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் 5 நாட்களுக்கு அந்த சிறுவனுக்கு உணவு உண்ணாமல் இருந்துள்ளான் .ICU-யில்  வைத்து இரவு பகலாக மருத்துவர் பிரகாஷும், பயிற்சி மருத்துவர்களும், செவிலியர்களும் கவனித்து கொண்டனர்.

மெதுவாக சிறுவனின் உடல் தேறியது 6 வது நாள் காத்து பிரிந்த பிறகு தண்ணியும் இளநீரும் சிறுவனுக்கு ஆதாரமாக கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சிறு குடல் 80 சதவீதம் இல்லாததால், வயிற்று போக்கு ஏற்பட்டு சிறுவனுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதையயடுத்து வயிற்று ஆதாரமாக 9 ஆம் நாள் இட்லி, சாதம் சாப்பிட ஆரம்பித்தான்.11வது நாள் யாரும் எதிர்பார்க்காதது நடந்தது. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய தையல் போட்ட தொப்புள் பகுதியில் இருந்து மலம் வர ஆரம்பித்தது. உள்ளே தைத்து வைத்த குடல் தையல் விட்தன் காரணமாக மலம் வருகிறது என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுவனுக்கு மலம் வயிற்று மேலே வருவதை பார்த்து சிறுவனின் அம்மா கதறி அழுதார். இதையடுத்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், நெரம்பு மூலம் சத்து மருந்து, மற்றும் உணவில் உள்ள சத்துக்கள் கலந்த விசேஷ நெரம்பு மருந்துகள் உள்ளிட்ட மருந்துகளை செலுத்தியுள்ளார் மருத்துவர் பிரகாஷ், இதையடுத்து தொப்புள் அருகே வந்த மலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததுள்ளது.

ஒரு கட்டத்தில் நார்மலாக மலம் கழிக்க ஆரம்பித்துள்ளான். உடல் தேறி வீட்டுக்கு சென்றுள்ளான் அந்த சிறுவன்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த சிறுவனுக்கு இது மறுபிறவி என்கிறார் அறுவை சிகிசிச்சை செய்த மருத்துவர் பிரகாஷ்.

கிட்டத்தட்ட 25 நாட்கள் அந்த சிறுபவன் தஞ்சாவூர் மருத்துவமனையில் இருந்துள்ளான். இந்த அறுவை சிகிச்சையால் சிறுவனின் குடும்பத்திற்கு  ஒரு ருபாய் கூட செலவு இல்லை.

இந்த அறுவை சிகிச்சை மற்றும் கவனிப்பின் மதிப்பு தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் 10 முதல் 12 லட்ச ரூபாய் வரை செலவாகி இருக்கும். இத்தகைய சிகிச்சை அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போல அரசு மருத்துவமனையில் பல உயிர்கள் வருடம் முழுவதும் காப்பாற்றப்படுகிறது ஆனால் இது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

சிறுவனுக்கு இத்தகைய அறுவை சிகிச்சை செய்த தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் பிரகாஷ் ராஜேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. பிரகாஷ் ராஜேந்திரனை போன்ற மருத்துவர்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருந்தால் நமது நாட்டில் தனியார் மருத்துவமனைகளே இருக்காது என  பொதுமக்கள்  சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government hospital doctor challenge surgery


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal