சீருடை அணியாமல் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் - கோரிகையை நிறைவேற்ற வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து நிர்வாகம் போன்றவற்றின் ஒப்பந்தத்தின்படி, ஒரு ஆண்டுக்கு இரண்டு செட் சீருடைகள் வழங்கப்பட்டது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். 

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு நான்கு சீருடைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால், இந்த சட்டம் அறிவித்த அடுத்த ஆண்டான 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் சீருடை வழங்கப்படவில்லை. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு ஒரு செட் சீருடை மட்டும் வழங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பல முறை அறிவுறுத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதன் காரணமாக, சீருடை வழங்காத போக்குவரத்து கழகத்தை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் சீருடை இல்லாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 

இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது, "எங்கள் கோரிக்கையை அரசுக்கும், போக்குவரத்து கழகத்துக்கும் பல முறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இன்று முதல் சீருடை இல்லாமல் கோரிக்கை அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என்றுத் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus drivers join duty in without uniform


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->