எட்டயபுரம் அருகே அரசுபேருந்து கடைக்குள் புகுந்த பரபரப்பு...! -ஓட்டுநர் படுகாயம்! நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து திருச்செந்தூரை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மர்ம விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த பேருந்தை ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்த 48 வயதான சொரிமுத்து என்பவர் ஓட்டினார்.

அந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் எம்.கோட்டூர் விலக்கு அருகே வந்தபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக பாய்ந்தது. அப்போது ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் சென்ற பேருந்து, சாலையோரத்தில் இருந்த இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைக்குள் கடுமையாக மோதி புகுந்தது.

இந்த அதிர்ச்சியில் கடையின் தகர கூரை பேருந்தின் முன்பகுதி கண்ணாடியை பிளந்துவிட்டது. மேலும் பேருந்து முன்பகுதி நொறுங்கிப் போனது. இதில் ஓட்டுநர் சொரிமுத்து கடுமையாக காயமடைந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக 40 பயணிகளும் உயிருக்கு ஆபத்தின்றி தப்பினர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்ததை பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.

இந்த விபத்தில் கடையில் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன. இந்த தகவலறிந்து விரைந்து வந்த எட்டயபுரம் காவலர்கள் காயமடைந்த ஓட்டுனரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதையடுத்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பினர்.

மேலும், பயணிகளை திருச்செந்தூருக்கு அனுப்ப மாற்றுப் பேருந்து, ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து எட்டயபுரம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government bus crashed into shop near Ettayapuram driver seriously injured What happened


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->