மூன்றாவது கொலை முயற்சி; 'இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை'; வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேச்சு..!
Trump talks about assassination attempt saying he doesnt know how long he will be alive
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி, அதிகாலை 01:30 மணியளவில் இளைஞர் ஒருவன் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அதோபார் ட்ரம்பின் வீட்டிற்குள் எச்சரிக்கை விடுத்து ஷாட்கன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான்.
அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவனைச் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தின் போது டிரம்ப் மற்றும் அவரது மனைவி வெள்ளை மாளிகையில் இருந்துள்ளனர்.
குறித்த இளைஞன் 21 வயதான ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளதாவது: ''நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை. எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?" என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.

அத்துடன், ஆபிரகாம் லிங்கன், கென்னடி போன்ற மிகப்பெரிய செல்வாக்குள்ள தலைவர்களையே இதுபோல இலக்கு வைப்பார்கள். ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ? கொஞ்ச காலம் ஒரு சாதாரண அதிபராக இருக்க முயற்சிப்போம்" என்று கூறியுள்ளார்.
மேலும், கொல்லப்பட்ட இளைஞன் மார்ட்டின், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தது அவனது குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை ட்ரம்பின் மீது, கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், இந்த மூன்றாவது முயற்சி ஆகும், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Trump talks about assassination attempt saying he doesnt know how long he will be alive