கொலைகாரர்களின் கூடாரமான திமுக... ரவுடிகளை மட்டுமே கொண்டு கட்சி நடத்தும் திமுக... நயினார் நாகேந்திரன்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை அருகே, வண்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறு சச்சரவில், உதவித் தொழிலாளர் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திரு. சிவமூர்த்தி என்பவரை, அப்பகுதி திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளரின் மகன் ஆதித்யா காரை ஏற்றி படுகொலை செய்துள்ள சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஐந்தாண்டுகால திமுகவின் அவல ஆட்சியில், “திமுககாரன்” என்ற அடைமொழி குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டது என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும் அதைக் கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களை அடிமைகள் போலவும், பொம்மைகள் போலவும் நடத்தும் திமுகவினரைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர்  அவர்களின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.

“குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என்று மேடைகளில் வீர வசனம் பேசினால் மட்டும் போதாது, அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், தறிகெட்டுத் திரியும் தமது கட்சிக் காரர்களை முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் கட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும். கடைந்தெடுத்த ரவுடிகளை மட்டுமே கொண்டு கட்சி நடத்தும் திமுகவை, அரியணையில் இருந்து மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Nainar Condemn to DMK Udhay MK Stalin


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->