பழைய பேப்பர் கடைக்கு அரசு பாடப்புத்தகங்களை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை; உ.பி-யில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதியன்று  பழைய பேப்பர் வியாபாரி ஒருவர் அரசுப் பாடப்புத்தகங்களை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்ய இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தங்கங்களை ஒரு லாரியில் ஏற்றிச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், அண்டை மாவட்டமான லக்கிம்பூரில் வைத்து, அந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

படிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் 2026-2027 கல்வியாண்டிற்காக 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க அச்சிடப்பட சுமார் 13,595 பாடப்புத்தகங்கள் ஆகும். விசாரணையில், அவை சட்ட விரோதமாக உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்கப்படவிருந்தது தெரிய வந்துள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளான ஷபீக் அகமது மற்றும் அலோக் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் சிங் மற்றும் பயிற்றுவிப்பாளர் அதுல் குமார் சிங் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த சமபவத்தில் ஈடுப்பட்ட பழைய பேப்பர் வியாபாரி மற்றும் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Illegal buying and selling of government textbooks in UP


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->