இது தேர்தல் வித்தை; 'அதிமுகவின் ரூ.10 ஆயிரம் அறிவிப்பு களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது'; திருமாவளவன்..! - Seithipunal
Seithipunal


2026 சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடையவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத்தொகை ஒருமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஏனைய பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் இந்த தொகை அறிவிப்பு குறித்து, செய்தியாளர்கள் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர்,  இது ஒரு தேர்தல் வித்தை. தாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று அவர்கள் (அதிமுக) நம்புகிறார்கள், அதனால் தான் இவ்வளவு பெரிய தொகையை அறிவித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திமுக ஏற்கனவே, மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை அறிவித்து, அவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்போது அதிமுகவும் தங்கள் வெற்றிக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது. இது களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.

மேலும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan says AIADMKs Rs10000 announcement will not have any impact on the field


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->