சென்னையில் சோகம்; நண்பரின் வீட்டில் குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்; தீவிர விசாரணையில் போலீசார்..! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகர் 19-வது தெருவை சேர்ந்த 25 வயதான கிளிண்டன் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்றிரவு 11 மணி அளவில் பெரம்பூர் ரமணா நகர் ஹவுசிங் போர்டு பி.பிளாக் பகுதியில் உள்ள நண்பர் பிரசாந்த் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது நண்பன் கிளிண்டனுடன் பேசிக்கொண்டிருந்த போது நண்பர் வீட்டில் குளிர்பானம் குடித்துள்ளார்.  குளிர்பானம் குடித்த சில நிமிடங்களில் கிளிண்டனுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது கிளிண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து கிடைத்த தகவலின் படி, செம்பியம் போலீசார் சென்று கிளிண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.முதல்கட்ட விசாரணையில் கிளிண்டன் போதைக்கு அடிமையானவர் என்பதும் கடந்த 06 மாதத்திற்கு முன்பு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man died after drinking soft drinks at a friends house in Chennai


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->