ஓடும் பேருந்தில் இருந்து கழன்று விழுந்த இருக்கை - நடத்துனரின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு மாநகர பேருந்து ஒன்று புறப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட இந்த பேருந்து, கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது.

அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்த நடத்துனர் இருக்கையின் நெட்டு போல்டு கழன்று அதில் அமர்ந்திருந்த நடத்துனர் பேருந்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட்டதையடுத்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துனரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஓட்டுநர் பேருந்தில் இருந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சாலையில் கிடந்த இருக்கையை எடுத்து பேருந்தில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார்.

ஓடும் பேருந்தில் இருந்து இருக்கை கழன்று நடத்துனர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus conductor injured in trichy


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->