ஜூலை 1ந் தேதி அரசு கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கம்; கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிக்கை..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 01ஆம் தேதி முதல் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. 

இது குறித்து கல்லூரக் கல்வி இயக்குனர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 7ந் தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர். 

இவர்களுக்கான கடைசி நாள் மே 29ந் தேதி என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதி வரையில் விண்ணப்பம் செய்ய கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 ( Shift – I – 101022 மற்றும் Shift – II – 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 

மாணவர்கள் வரும் 29 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியல் ஜூன் 2 ந் தேதி வெளியிடப்படும். பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியில் கல்லூரி வாரியாகதயார் செய்யப்பட்டு ,3 ந் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொது கலந்தாய்வு ஜூன் 8-ம் தேதி முதல் அந்தப்பகுதியில் உள்ள கல்லூரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடைபெறும். மேலும் ஜூன் 8 ந் தேதி முதல் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1 ந் தேதி துவங்குகிறது. ஜூன் 15ஆம் தேதி முதல் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government Arts and Science Colleges to Reopen on July 1st


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->