தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.4000 வழங்க தமிழக அரசு உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழ்த்தொண்டாற்றிய  தமிழறிஞர்களுக்கு  மாதம் உதவித்தொகை ரூ. 4000  தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழுக்காக தொண்டாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் இந்த உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

தகுதிகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் வழங்கப்படும்  இந்த உதவித்தொகையைப் பெற  தமிழில் நூல்கள் எழுதியுள்ள அறிஞர்கள், தமிழ் அமைப்புகளில் இணைந்து தமிழுக்காக தொண்டாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.  வயது 58 பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். அத்துடன் மாத வருமானம் 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஆகையினால் வட்டாட்சியரால் வழங்கப்பட்ட வருமானச் சான்று, தமிழ் அறிஞர் பணியாற்றிமைக்கான ஆதாரங்கள், இரண்டு தமிழ் அறிஞர்களிடம் தமிழ்ப்பணி  ஆற்றிவருவதற்கான தகுதிநிலைச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அளிக்க வேண்டும். 

இதற்கான விண்ணப்பம் நீங்கள் வசிக்கும் உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்டு 31 ஆம் தேதி ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Goverment of Tamilnadu orders to provide Rs. 4000 per Month to Tamil Scholars


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->