கூகுள் மேப்ஸில் புதிய AI அம்சங்கள்: ஜெமினி இணைப்பு மற்றும் NHAI தரவுகள்!
Google Maps new version
சென்னை: நாட்டின் மிகப்பிரபலமான வழிகாட்டிச் சேவையான கூகுள் மேப்ஸ், பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கூகுளின் செயற்கை நுண்ணறிவான ஜெமினி (Gemini AI) மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) தரவுகளுடன் இந்த மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய அம்சங்கள்:
ஜெமினி AI இணைப்பு: பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைத் தொடாமல், வாய்ஸ் கமெண்ட்கள் மூலம் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும். இது பயணத்தின்போது வழிகாட்டலைப் பெறுவதை எளிதாக்குகிறது.
NHAI இணைப்பு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் (NHAI) இணைக்கப்பட்டுள்ளதால், சாலையில் உள்ள போக்குவரத்துத் தடைகள் மற்றும் மாற்றுப்பாதைகள் குறித்த மிகத் துல்லியமான தகவல்கள் உடனடியாகக் கிடைக்கும்.
விபத்து எச்சரிக்கை: விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளைப் பயனர்கள் நெருங்கும்போது, கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வசதியையும் வழங்குகிறது.
இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கான அவதார்: இரு சக்கர வாகன ஓட்டுநர்களின் வசதிக்காகப் புதிய அவதார் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
Google Wallet இணைப்பு: பயண மேலாண்மையை எளிதாக்க, கூகுள் வாலட் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதி உள்ளிட்ட சேவைகளையும் கூகுள் மேப்ஸ் மூலம் பெற முடியும்.
இந்த மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், பயணத்தின்போது பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.